Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது!

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது!

-

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்துர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வருகிற ஜூலை 02ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

 

MUST READ