தாம்பரம் அருகே ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாத சாலையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (42). இவர் அதே பகுதியில் மளிகைகடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவி லக்ஷ்மி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு குடும்பத்துடன் தூங்க சென்ற நவநீதகிருஷ்ணன் அதிகாலையில் பார்த்தபோது படுக்கையில் இல்லை, இதனால் மனைவி தேடியபோது வேறு ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உறவினர்கள் நவநீதகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி 194 BNSS சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இதில் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்த நவநீதகிருஷ்ணன் தன் தற்கொலைக்கு ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்தகமே காரணம் என்பதும் சுமார் 6 லட்சம் வரை பணத்தை உறவினர்களிடம் கடன் பெற்று நட்டமான நிலையில் கடன் கொடுத்தவர்கள் திரும்பி கேட்டதால் மன உளைச்சலில் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.