Homeசெய்திகள்தமிழ்நாடுடான்ஜெட்கோ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

டான்ஜெட்கோ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

-

 

மின் கம்பத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான கட்டணத்தை 5% ஆக குறைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஆவடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன மருத்துவமனை

இது தொடர்பாக டான்ஜெட்கோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது நிலம் அல்லது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள மின் கம்பம், மின் கம்பி, மின் பாதை மற்றும் மின் மாற்றி மற்றும் மின் சாதனங்களை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பிக்கும் போதும் மொத்த மதிப்பீட்டு தொகையில் 22% செலுத்த வேண்டி இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆவடி அருகே பண மோசடி செய்த பெண் கைது!

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், 22% கட்டணத்தை 5% ஆக குறைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டு தொகை வெகுவாகக் குறையும் என்பதால் அவர்கள் மிகவும் பயனடைவார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

MUST READ