
இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்
அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மது விற்கப்படுவதாக சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (மே 25) விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுபான விற்பனை உரிமம் தொடர்பான நிபந்தனைகளை கிளப்கள், ஹோட்டல்கள் பின்பற்றுகின்றனவா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்குத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
பராமரிப்பில்லாத உடுமலை நகராட்சி பூங்கா
இதனிடையே, நிபந்தனைகளை கிளப்கள், ஹோட்டல்கள் பின்பற்றுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.