நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட பந்தலூர் அருகே உள்ள குந்தலாடியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சாம்பார் மணி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் இன்று அதிகாலை மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையர்களைச் சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்ததாக தகவல் கூறுகின்றனர்.
“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!
அப்போது, கொள்ளையர்கள் காவல்துறையினரைக் கத்தியால் தாக்க முயன்றுள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் சாம்பார் மணி என்பவரை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து, கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதேபோல், காயமடைந்த இரண்டு காவலர்களும் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தப்பியோடிய மற்றொரு கொள்ளையனைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் மதுபானங்கள் திருடுவதை சாம்பார் மணி வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறும் காவல்துறையினர், சாம்பார் மணி காவலர்களை கத்தியால் தாக்கியதாகவும், அதனால் தான் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் கூடலூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.