தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவை விதி எண் 110- ன் கீழ் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வணிகர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க சமாதானத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். ரூபாய் 25,000 கோடி அளவுக்கு வணிக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!
எனவே, ரூபாய் 50,000- க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். ரூபாய் 50,000- க்கு கீழ் உள்ள தொகை தள்ளுபடி செய்யப்படுவதால் 95,000 சிறு வணிகர்கள் பயன் பெறுவர்” எனத் தெரிவித்துள்ளார்.