Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குறார் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குறார் விஜய்

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்க இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவானது கடந்த வாரன் ஜீன் 28-ம் தேதி 20 மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீதமுள்ள 19 மாவட்ட மாணவர்களுக்கு தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னை திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை புரிந்துள்ளார்.

இவ்விழாவில் 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை த.வெ.க. நிர்வாகிகள் மாணவர்கள், பெற்றோரை பேருந்துகள் மூலம் அழைத்து வந்துள்ளனர். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மீதமுள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி விருதுகள் விழா நடைபெற இருக்கிறது.

 

MUST READ