Homeசெய்திகள்தமிழ்நாடு'கலை நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்து'- 10- க்கும் மேற்பட்டோர் காயம்!

‘கலை நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்து’- 10- க்கும் மேற்பட்டோர் காயம்!

-

 

'கலை நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்து'- 10- க்கும் மேற்பட்டோர் காயம்!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சியின் போது, பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விபத்து ஏற்பட்டது.

மார்ச் 01ம் தேதி அதிமுக பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்

பல்லவராயன்பட்டியில் காஞ்சிவனம் சுவாமி திருக்கோயில் திருவிழா, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான நேற்று (பிப்.24) கோயில் முன்பாக அமைந்துள்ள நாடக மேடையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதைப் பார்ப்பதற்காக, அப்பகுதியில் உள்ள நீரோடையின் குறுக்கே 15 அடி நீளத்திற்கு தற்காலிகமான இரும்பு மற்றும் கட்டைகளால் அமைக்கப்பட்டிருந்த மேடை பாரம் தாங்காமல் சரிந்து நீரோடையின் உள்ளே விழுந்து நொறுங்கியது.

இதில் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் உள்பட 10- க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிறு சிறு காயங்களே இருந்ததால், முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர்.

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது – ராமதாஸ் வலியுறுத்தல்

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவிழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ