கோயில்களில் அர்ச்சகர்களின் தகுதிக் குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“மொழிபெயர்ப்புப் பணிக்காக ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு”- தமிழக அரசு தகவல்!
கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், திருக்கண்ணபுரம் பெருமாள் கோயிலில் செயல் அதிகாரிகளால் மரபுகள் மீறப்படுவதாகக் கூறி, ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, கோயில்களில் அர்ச்சகர்களின் தகுதியை ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும் எனவும், சிறுவர்களும் அர்ச்சகர்களாக செயல்படுவதால் அர்ச்சகர்களின் நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் உத்தரவு!
கோயில்களை சீரமைக்க அனுமதி வழங்கும் புராதனக் குழு உள்ளிட்டக் குழுக்கள் மாற்றியமைக்கப்படும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.