Homeசெய்திகள்தமிழ்நாடுகோயில் உண்டியலை உடைத்த இருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்!

கோயில் உண்டியலை உடைத்த இருவர் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள்!

-

அம்பத்தூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து புள்ளிங்கோ இருவர் பணத்தை மூட்டை கட்டி திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே மணணுர்பேட்டை பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை கொண்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.அதில் இருசக்கர வாகனத்தில் வந்த புள்ளிங்கோ இருவர் உண்டியலை உடைத்து பணத்தை துணியில் மூட்டை கட்டி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.இந்த காட்சிகளைக் கொண்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபர்களை தேடி வருகின்றனர். கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியுள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ