Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

-

- Advertisement -

பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 

பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் பேசினார்.

இன்று பள்ளிகள் திறக்கும்போதே மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் உள்ளிட்ட மாணவ நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான கடந்த கல்வியாண்டு ஏப்ரல் 23ம் தேதி முடிவடைந்தது தொடர்ந்து, ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்று மாநில முழுவதும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறக்கப்பட்டன.  சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ்.நிதி மேல்நிலைப்பள்ளியில்(அரசு உதவிபெறும் பள்ளி) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள், வரைபடம் உள்ளிட்ட மாணவ நலத்திட்டங்களை வழங்கினர்.

மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை அவர்களை எளிதில் சென்றடையும் வகையில் பள்ளி வளாகத்திலேயே ஆதார் பதிவு மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு எண் தொடங்கும் சிறப்பு முகாமையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

மேடையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முதல்வர்  ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்தியாவில் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், கல்வித்துறையில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்து அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும், பல சாதனையார்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த முறை நம் மாணவ செல்வங்களுக்கும், சமுயாயத்திற்கும் ஏற்ற வகையில் நல்ல திட்டங்கள் மானிய கோரிக்கையில் இடம்பெறும். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் நாட்டில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல சாதனைகளை நீங்கள் புரிய வேண்டும், முழு கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும், வகுப்பறையில் படிப்பது மட்டும் பாடம் இல்லை, விளையாட்டு மைதானத்தில் சொல்லி கொடுப்பதும் பாடம் தான் என தெரிவித்தார்.

நேற்று கூட நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் லண்டனுக்கு சென்றுள்ளதாகவும், தெரிவித்தார். கடந்த ஆண்டு  பாட நோட்டு புத்தகங்கள் வழங்க இரண்டு மூன்று மாதங்கள் காலதாமதம் ஆனது. ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கும் பொழுதே மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்டங்கள்  கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த வயதில் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தி படிக்க வேண்டும். படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டு துறையிலும் மாணவர்கள் நன்றாக செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர்கள் அவர்களின் அறிவுரைகளை கேட்டு மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்வில் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

MUST READ