Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது - அமைச்சர் அதிரடி

சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது – அமைச்சர் அதிரடி

-

சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது – அமைச்சர் அதிரடி

சிதம்பரத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகனின் பேச்சால் சிரிப்பலை முதல் நிதியமைச்சரின் அச்சம் வரை' -இன்றைய  பேரவை நிகழ்வின் ஹைலைட்ஸ் | from Duraimurugan speech to finance minister  fear - key events ...

சிதம்பரம் தொகுதி சி.முட்லூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் கே.ஏ பாண்டியன் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிதம்பரம் பகுதியில் விளையும் மல்லிகைப் பூக்கள் கும்பகோணம், கடலூர் பகுதிக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. சுமார் 132 மெட்ரிக் டன் அளவிற்கு மல்லிகை விளைகிறது. உள்ளூர் சந்தையிலும் விற்பனையாகிறது. அந்த பகுதியில் மல்லிகைப் பூ உற்பத்தியானது ஆண்டு முழுவதும் சீராக இல்லை, எனவே அங்கு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், 2500 ஏக்கர் அளவில் பருத்தி விளைவிக்கப்படுகிறது. எனவே சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் சார்பில் நூற்பாலை அமைக்க அரசு முன்வருமா என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர் தா.மோ.அன்பர்சன், ஊரக கடன் சார்பில் தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படும். உற்பத்தி விற்பனை, அரசு கொள்முதல் ஆகியவை குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 72 நிறுவனங்களுக்கு 1. 75 கோடி மானியத்திடன், 3. 96 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 501 நபர்களுக்கு 11.87 கோடி மானியத்துடன் 37.03 கடன் வழங்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் முன்வந்தால் அரசு ஆய்வு செய்யும் என தெரிவித்தார்.

MUST READ