“மகளிர் உரிமை தொகை – விண்ணப்பிக்க இயலாதோர் விண்ணப்பிக்கலாம்” தங்கம் தென்னரசு
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாமல் போனவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கு முழு தகுதி இருந்தும் அவர்களது பெயர்கள் விட்டுப் போயிருந்தால், அவர்களுக்கான குறைதீர்ப்பதற்கான அமைப்பு முறையை உருவாக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். தாலுகா அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஏதேனும் காரணத்தால் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாமல் விடுபட்டு போயிருந்தால் உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மைய தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும். இந்த திட்டத்தில் ஏழைகள் தவிர்க்கப்படவில்லை. யாருக்கெல்லாம் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.