Homeசெய்திகள்தமிழ்நாடு‘விரைவில் நீதிமன்ற படிகளை எண்ண போகிறீர்கள்’ ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை

‘விரைவில் நீதிமன்ற படிகளை எண்ண போகிறீர்கள்’ ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை

-

‘விரைவில் நீதிமன்ற படிகளை எண்ண போகிறீர்கள்’ ஈபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு எச்சரிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

kc

ஈபிஎஸ் அவர்களே..! சட்டம் தன் கடமையை செய்யும்… விரைவில் நீதிமன்ற படிகளை எண்ண போகிறீர்கள் எனவும் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியவர் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகள் ஆட்சியில், ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்துக்கு செந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் பழனிசாமி.

“முதலீடு” என்றால் தனக்குக் கிடைக்கும் ஊழல் பணம் மட்டுமே என அகராதியில் புதிய அர்த்தம் கண்டுபிடித்த பழனிசாமி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை பெறப் போகும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது அவதூறு பேசுகிறார். அந்த அளவிற்கு அவருக்கு பொறாமையும் எரிச்சலும் மனதிற்குள் கோடை வெயிலை விட அனலாக கக்குகிறது; கோடநாடு கொலை மற்றும் அங்கு நடைபெற்றதாக கூறப்பட்ட தற்கொலைக்கு அடையாளமாக இருந்த மரத்தை வெட்டி சாட்சியங்களை மறைத்தது போன்ற மர்மங்கள் விலகும்போது எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை.

தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம். அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம் வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம் எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற “பெட்டி பெட்டியாக” பணம் என கடந்த ஆட்சியில் விட்ட “கான்டிராக்ட் ஊழல்” அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும், தார்மீக உரிமையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ