Homeசெய்திகள்தமிழ்நாடு"தஞ்சை தமிழ் பல்கலை.யில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“தஞ்சை தமிழ் பல்கலை.யில் கவிஞர் தமிழ்ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

 

"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது கேடு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
Photo: TN Govt

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை முன்னிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

என் உயிர் தோழன் பாபுவின் மறைவு…. இரங்கல் தெரிவித்த பாரதிராஜா!

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்க 50 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வைக்கப்படும். குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் கிராமத்தில் பிறந்த கவிஞர் தமிழ்ஒளி பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி, கவிதைகள் படைத்தவர்.

விஜயுடன் இணையும் அரவிந்த் சுவாமி….. ‘தளபதி 68’ குறித்த அப்டேட்!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், சமூகத்தில் நிலவிய சாதிய வேறுபாடுகளை சாடி, கவிதைகள் படைத்ததுடன், விளிம்பு நிலை மக்களின் விடுதலையும் பாடியவர் கவிஞர் தமிழ்ஒளி என புகழாரம் சூட்டினார். தமிழ் மொழி சிறுகதைகளில் தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களை பாத்திரங்களாக இருந்தார்கள்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுக் கூர்ந்தார்.

MUST READ