ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம்மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய நான்கு பேரும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.இதேபோல் தங்கள் தரப்புக்கே தமிழ் என்று உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனு மட்டும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக மற்ற மூவரின் மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்றும் அவற்றை சேர்த்து பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தனர்.