Homeசெய்திகள்தமிழ்நாடுபன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்

பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்

-

- Advertisement -

பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

OPS

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறியதை அடுத்து, பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவிடப்பட்டது. தீர்மானங்கள் குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டு பொதுச்செயலாளார் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ்-ன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

eps ops

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்த கட்சி தேர்தலும் செல்லும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டுவை மனு தள்ளுபடி உத்தரவிட்டனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரின் நீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கினர். உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

MUST READ