சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில், மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
சமையல் எரிவாயு விலையை, சிலிண்டருக்கு ரூ. 50 விலை உயர்த்தி, மக்கள் மீது ஒன்றிய பாஜக அரசு நடத்தியிருக்கும் பொருளாதாரயுத்தம் என குற்றம் சாட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. எர்ணாவூர் பாரத் நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், பெட்ரோல் மற்றும் டீசல் மீது சிறப்பு கலால் வரியையும் உயா்த்தியதால், அதன் விலையும் அதிகரித்திருக்கிறது என குற்றம் சாட்டினார்கள். ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு பேரிடியாக இருப்பதால், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்து வரும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம் சுமார் ரூ.7,000 கோடி அளவிற்கும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறப்பு கலால் வரி அதிகரிப்பால் சுமார் ரூ. 32 ஆயிரம் கோடி அளவிற்குமான சுமையை ஒன்றிய பாஜக அரசு மக்கள் தலையில் சுமத்தியதாக குற்றம் சாட்டினார்கள்.
தம் வாழ்நாளை மது ஒழிப்பிற்காக செலவிட்ட தலைவர் – தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வருத்தம்