Homeசெய்திகள்தமிழ்நாடுஇறந்ததாக சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்... இறுதிச்சடங்கின்போது கண் விழித்ததால் உறவினர்கள் திகைப்பு

இறந்ததாக சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்… இறுதிச்சடங்கின்போது கண் விழித்ததால் உறவினர்கள் திகைப்பு

-

மணப்பாறை அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டுசென்ற மூதாட்டி  உயிருடன் இருந்ததால், உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம்  துவரங்குறிச்சி அருகேயுள்ள சுரக்காய்பட்டி கிராமத்தை சேர்ந்த பம்பையன் என்பவரது மனைவி 60 வயது சின்னம்மாள். இவர் கடந்த 16ஆம் தேதி பூச்சி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமனதால் உறவினர்கள் இன்று வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் சின்னம்மாள் இறந்ததாக கருதிஅவரது உறவினர்கள் சுடுகாட்டில் இறுதிச் சடங்கிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சுடுகாட்டில் அவருக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட இருந்தபோது,  சின்னம்மாள் திடீரென கண் விழித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மூதாட்டி சின்னம்மாளை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சின்னம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்ய இருந்த பெண் திடீரென கண்விழித்த சம்பவம் துவரங்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ