பெரியார் குறித்து சீமான் தெரிவித்துள்ள சர்ச்சை கருத்து தொடர்பாக வீடியோ ஆதாரங்களோடு சென்னை காவல் ஆணையர் ஆலுவலகத்தில் தொடர் புகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியார் குறித்து அவதூறாக சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பேசியிருப்பதாகவும் அது குறித்த வீடியோ ஆதாரங்களோடு அடுத்த அடுத்த புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. திமுக சார்பில் சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன்பின்னா் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் உமாபதி ஆகியோர் தனித்தனியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனா்.
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: இன எதிரிகளின் கருவியான சீமான்… கோவை கு.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!