தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமை திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்கட்சிகள் சாத்தியமற்ற வாக்குறுதி என கூறினர்.
பின்னர் அந்தந்த மாநிலங்களில் பொறுப்பேற்ற அமைச்சரவையினர் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய மகளிர் உரிமைச் சட்டத்தை மாடலாக கொண்டு தங்கள் மாநிலங்களில் அமுல்படுத்தினர்.
இதன் மூலம் தமிழக முதல்வர் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி முதல்வராக திகழ்கிறார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான கோவி. செழியன் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.
அப்போது பேசிய கோவி. செழியன்,
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் ஒன்றான மகளிர் உரிமைத் திட்டம். இந்த திட்டத்தை சாத்தியமற்ற திட்டம் என பல்வேறு கட்சியினர் தெரிவித்தனர். பின்னர் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைத்தவர்கள் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைச் சட்டத்தை பின்பற்றி அந்தந்த மாநிலங்களில் அமல்படுத்தினர் .
இதன் மூலம் தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி முதல்வராக திகழ்கிறார் என கோவி. செழியன் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகுப்பினர் இடையே ஏற்ற தாழ்வுகள் உள்ளது. அங்கு சமூக நீதி ,சமதர்மம் கிடையாது. மனுதர்மம் உள்ளது.
ஆனால் இங்கு தமிழகத்தில் ஏற்ற தாழ்வுகள் அற்றவகையில் பல்வேறு தரப்பினரும் ஒன்றாக உள்ளனர் என தெரிவித்தார். விரைவில் மாற்றுத் திறனாளிகள் 50 நபர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
பரபல ஆன்லைன் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு – இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு