Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த கிண்டி மருத்துவமனை இயக்குநர்!

மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த கிண்டி மருத்துவமனை இயக்குநர்!

-

கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவர் மயக்க நிலையில் உள்ளதாக கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் குறித்து கிண்டி மருத்துவமனை இயக்குநர் பார்த்தாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் பெருங்களத்துரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியின் ஓ.பி. அறைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின் பகுதி, நெற்றி, முதுகு உள்ளிட்ட இடங்களில் விக்னேஷ் கத்தியால் குத்தியுள்ளார்.

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது மயக்க நிலையில் உள்ளார். அவருக்கு ரத்தப்போக்கு அதிகம் இருந்ததால் 2 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. மருத்துவர் இதய நோயாளி என்பதால் 6 முதல் 8 மணி நேரத்திற்கு பின்னரே அவரது நிலை குறித்து தெரிவிக்க முடியும்.

தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜிக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கவும், கத்துக்குத்து சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மருத்துவர் பாலாஜி மீதான கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லுரிகளில் அவசர சிகிச்சை, உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து, அனைத்து துறை மருத்துவர்களும் காலவரையின்றி பணி புறக்கணிப்பு போராட்த்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ