மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ். ராமச்சந்திரன். இவர் பல ஆண்டுகளாக எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வருகிறார். மேலும் இவர் சோலார் பிளான்ட், கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு பெரும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பின் போது சட்ட விரோத பணம் பறிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளாக கருதப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணல் விற்பனையில் முறைகேடு, சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், சோதனை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேபோல் அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவடைந்தது. ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆடிட்டர் அலுவகலங்களில் மட்டும் சோதனை தொடர்கிறது.