Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

-

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு, எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கிய விவகாரத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில்  முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

vaithilingam

இந்த நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவத்தனையில் ஈடுபட்டதாக கூறி வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் இன்று  காலை முதல் சோதனை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழு  சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவரது எம்எல்ஏ விடுதி அறையிலும், அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது அறையின் சாவியை பெற்று அமலாக்கத்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர்த்து மேலும் 4 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ