spot_imgspot_img
Homeசெய்திகள்ரயில் பெட்டிகளுடன் இணைக்கும் கப்ளிங் உடைந்ததால் தனியாக சென்ற என்ஜின்... காட்பாடி அருகே பரபரப்பு

ரயில் பெட்டிகளுடன் இணைக்கும் கப்ளிங் உடைந்ததால் தனியாக சென்ற என்ஜின்… காட்பாடி அருகே பரபரப்பு

-

- Advertisement -
kadalkanni

காட்பாடி அருகே திப்ரூகர் – கன்னியாகுமரி விரைவு ரயிலின் என்ஜினில் இருந்து பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் உடைந்து, என்ஜின் மட்டும் தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக சென்று கொண்டிருந்தது. திருவலம் அருகில் செல்லும்போது விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் இருந்து பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் திடீரென கழன்று, என்ஜின் மட்டும் தனியாக ஓடியது. இதை கவனித்த என்ஜின் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து கப்ளிங்கை ரயில் பெட்டிகளுடன் இணைத்து, ரயிலை இயக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்கு பின்னர் என்ஜின் கப்ளிங் சரி செய்யப்பட்டு, ரயில் பெட்டிகளுடன் இணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஒட்டுநர் ரயிலை இயக்கி சென்றார். காட்பாடி ரயில் நிலையத்தை அடைந்தவுடன் புதிய என்ஜின் மாற்றப்பட்டு ரயிலை இயக்கப்பட்டது.

இதனிடையே, விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கப்ளிங் உடைந்ததால் காட்பாடி வழித்தடத்தில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

MUST READ