விருத்தாசலம் அருகே பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தில் அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் குடிசை வீடுகள் இல்லாத தமிழகமாக உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டும் பணி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது அதன் மூலம் நான்கு தவணையாக இரண்டு லட்சத்து 10 ஆயிரம் பணம் வீடு கட்டும் பயனாளிகளுக்கு அவரது வங்கி கணக்கில் வழங்கப்படுகிறது
அந்தத் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கண்டியங்குப்பம், வயலூர் பகுதிகளுக்கு 47 வீடுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
அதன் பேரில் பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேசன் (வயது 40) இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டுவதற்காக ஆணை வழங்கப்பட்டது அதனை முன்னிட்டு அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். இந்த நிலையில் அரசு அறிவித்தபடி அவர் கட்டிட அடித்தளம் அமைத்து புகைப்படம் எடுத்து முதல் தவணை ரூபாய் 50,000 பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார் இந்த நிலையில் அவருக்கு அவரது வங்கிக் கணக்கில் ரூபாய் 50,000 கிரெடிட் செய்யப்பட்டுள்ளது என்று குடிசை மாற்று வாரியம் கடலூர் அலுவலகத்தில் கூறினர்.
அதன் பேரில் அவர் தனது வங்கியில் சென்று பார்த்துள்ளார் அப்பொழுது அவர் வங்கிக்கு பணம் வரவில்லை என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர் மீண்டும் குடிசை மாற்று வாரியம் கடலூர் அலுவலகத்தில் சென்று இன்னும் பணம் வரவில்லை என்று கூறியுள்ளார். அங்கு இருந்த அதிகாரிகள் உங்கள் வங்கி கணக்கில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அனுப்பி உள்ளோம் என்று கூறினர் பின்னர் அதன் பேரில் அவர் மீண்டும் வங்கிக்குச் சென்று கேட்டுள்ளார்
அப்பொழுது வங்கி மேலாளர் உங்கள் கணக்கில் எந்த ஒரு அலுவலகத்தில் இருந்தும் பணம் வரவில்லை என்று கூறியுள்ளார் பின்னர் அவர் வங்கி கணக்கு பரிவர்த்தனையை பதிவு செய்து அதனை நகல் எடுத்துக்கொண்டு கடலூர் குடிசை மாற்று வாரியம் அலுவலகத்திற்கு சென்று கொடுத்தார். அப்பொழுது அவர்கள் அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் அலட்சியமாக உங்கள் வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட் மற்றும் பணம் வரவில்லை என்று மனு ஒன்று எழுதிக் கொடுங்கள் என்று கூறியுள்ளனர்.
அவரும் அதிகாரிகள் கூறியது போல் வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட் மற்றும் தனக்கு முதல் தவணை பில் பணம் ரூபாய் 50,000 வரவில்லை என்று மனு ஒன்று கடந்த 2018 ஆம் ஆண்டு கொடுத்துள்ளார் அதிகாரிகள் அதனைப் பெற்றுக் கொண்டு எங்கு தவறு நடந்தது என்று சரி பார்க்கிறோம் என்று கூறினர். ஆனால் இதுவரையிலும் அவர்கள் இதோ பார்க்கிறேன் இதோ பார்க்கிறேன் என்ற சாக்குபோக்கு காட்டி வருகின்றனர் பணம் பயனாளிகளின் வங்கி கணக்குக்கும் செல்லவில்லை அந்தப் பணம் மீண்டும் அரசு அலுவலகத்துக்கும் வரவில்லை என்று கூறுகின்றனர் அந்தப் பயனாளியின் முதல் தவணை பணம் ஐம்பதாயிரம் யார் ஆட்டை போட்டது என்று இதுவரை தெரியாத புதிராக உள்ளது அதிமுக ஆட்சியில் பயனாளிக்கு வழங்கப்பட்ட ரூபாய் 50,000 பணத்தை அதிகாரிகள் ஆட்டைய போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதேபோல் பயனாளி வெங்கடேசன் தனக்கு வீடு கட்டுவதற்காக பணத்தை முறையாக பெற்றுத் தர வேண்டும் நான் வீடு கட்ட முடியாமல் எனது மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன் இதேபோல் எத்தனை பேருக்கு பணம் வழங்காமல் வீடு கட்டாமல் இருக்கிறார்கள் என்று தமிழக அரசு கணக்கெடுத்து உரிய பயனாளிகளுக்கு பணத்தை வழங்கி வீடு கட்ட உதவுமாறு கேட்டுக் கொண்டார்.