தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னையில் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பெருமளவுக்கு பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ மக்கள் படகுகள் மற்றும் உடைமைகளை இழந்து பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் படி மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டுள்ளனர். பழவேற்காட்டிற்கு அருகில் உள்ள குளத்து மேடு, கருங்காளி, செஞ்சி அம்மன் நகர் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் முழுவதும் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள 308 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டு, ஆண்டார் மடம் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீரால் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை மீட்பு படையினர் காலம் தாழ்த்தாமல் மீட்டு வருகின்றனர். காற்றின் வேகம் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று இரவு வரை அதிக கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பழவேற்காட்டை சூழ்ந்த வெள்ளம்… மீட்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டுள்ளது!
-