Homeசெய்திகள்தமிழ்நாடுகிராம சபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம்  உத்தரவு

கிராம சபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம்  உத்தரவு

-

- Advertisement -

கிராம சபை கூட்டங்கள்  உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறாதா தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.கிராம சபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம்  உத்தரவு

தமிழகத்தில்  கிராம ஊராட்சிகள்  சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் நாளுக்கு  7 நாளுக்கு முன்னதாக ,  கிராம சபை கூட்டம் நடைபெறும் நாள்,  இடம் குறித்து தொடர்புடைய கிராம ஊராட்சிகளில்  அறிவிப்பு வெளியிட வேண்டும்.

கிராம சபை கூட்டம் நடநடைபெறும் போது, கிராம மக்கள்  ஒரு தீர்மானம் கொண்டு வந்தால்,  அதை  ஏற்க வேண்டும். இந்த பணிகளை அந்த பகுதியில் உள்ள தாசில்தார்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என  உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது. மேலும் இது குறித்து,  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கடந்த  2018 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த உத்தரவை முழுமையாக நடைமுறை படுத்த வில்லை.எனவே, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை  செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி துறையூரை சேர்ந்த குருநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ,நீதிமன்ற அவமதிப்பு  வழக்கின் மனுவில் கூறியிருந்தார் . இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன்,  விக்டோரியா  கவுரி  முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது,அனைத்து நீதிபதிகள் ,கிராம சபை கூட்டம் உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறாதா என தாசில்தார்கள் ஆய்வு செய்கிறார்களா என  தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

MUST READ