Homeசெய்திகள்தமிழ்நாடுகரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு

-

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு

வருமான வரித்துறை சோதனையில் ரூ. 350 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் சுமார் ரூ.3.50 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த 26 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் மின்துறை அமைச்சர் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் எட்டு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு சென்றபோது வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதால் ஐடி அதிகாரிகள் அளித்த புகாரின் படி திமுகவினர் உள்பட19 நபர்களை கைது செய்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை விரிவுபடுத்தி சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் நடத்தி வந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொங்கு மெஸ் மணி சொந்தமான இரண்டு இடங்கள்,எம் சி சங்கருக்கு சொந்தமான அதுவலகத்திற்கு சீல் வைத்து உள்ளனர். அதேபோல இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.
இந்நிலையில் எட்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் வழக்கறிஞர் அலுவலகம், கட்டிட பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று அங்கிருந்து சில ஆவணங்கள் கை படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற சோதனை நிறைவு செய்தனர். வருமானவரித்து அதிகாரிகள் சென்னை, மதுரை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து  வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் இருந்து கிளம்பினர்.

MUST READ