Homeசெய்திகள்தமிழ்நாடுசேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்

சேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்

-

காங்கேயம் அருகே பள்ளி குழந்தைகளை காப்பாற்றி, உயிர் நீத்த வாகன ஓட்டுநர் சேமலையப்பன் இல்லத்திற்கு வந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்தார்.

சேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (49). காங்கேயம் சுமை தூக்குவோர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சேமலையப்பன், வெள்ளகோவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பள்ளி வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து செல்லும் வழியில், வெள்ளகோவில் பழைய போலீஸ் குடியிருப்பு அருகே சேமலையப்பனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

பின்னர் வாகனத்திற்குள் 10க்கும் மேற்பட்ட சிறார்கள் இருந்த நிலையில் வலியை பொருட்படுத்தாமல் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம் என கருதி வேனை சாலை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தி விட்டு உயிரிழந்தார்.

சேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்

பின்னர் அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சேமலையப்பன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்த செய்தி நேற்று சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவிய நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சேமலையப்பனின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக பள்ளி குழந்தைகளை காப்பாற்றி பின்னர் தன்னுயிர் நீத்த பள்ளி வேன் ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்

இந்நிலையில் இன்று காலை சேமலையப்பனின் பெற்றோரான சுப்பன், மற்றும் மனைவி காவேரி ஆகியோரிடம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ், திமுக மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் காசோலையை நேரில் வழங்கினார்.

இதனை தொடர்ந்து காங்கேயம், சத்யா நகரில் உள்ள மறைந்த சேமலையப்பன் இல்லத்திற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று, அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின் அவரது மகன்கள் மற்றும் பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

MUST READ