பொன்முடியை அமைச்சரவையில் இருத்து நீக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கோரிக்கையாக முன் வைக்கிறோம் என வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அம்பேத்கர் பிறந்ததினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் தருண்சுக் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பேசினார்.மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
பாஜக தேசிய செயலாளர் தருண்சுக் இந்தி மொழியில் பேசுவதை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழ் மொழியில் மொழிபெயர்ந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பேசியதாவது,
“அம்பேத்கர் ஜெயந்தி விழாவை ஒட்டி அம்பேத்கர் சிலையை தூய்மை செய்து 14 ஆம் தேதி பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளது. நேருவும், காங்கிரஸ் கட்சியும் அம்பேத்கருக்கு முக்கியதும் கொடுக்காது குறித்து அரங்ககூட்டம் மற்றும் கருத்தரங்கமானது ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 25 வரை நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கம் ஒரு பட்டியிலின பெண் ஒருவரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.
இன்று அது குறித்தான மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாநிலம் முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி விழாவை பாஜக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது என தெரிவித்தார்.(அவர் பேசி கொண்டு இருந்த போதை இடையே மின்வெட்டு ஏற்பட்டது) பெண்கள் பற்றி அவதூறாக பேசிய பொன்முடி கட்சி பொறுப்பில் இருந்து திமுக நீக்கி உள்ளது குறித்தான கேள்விக்கு…
திமுகவின் தலைவர்கள், திமுக அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எப்படி அநாகரிகமாக அறுவெறுக்க தக்கமாக பேச்செல்லாம் பேசுவார்கள் என்பதற்கு இன்னும் ஒரு சாட்சி தான் மாநிலத்தின் அமைச்சர் பொன்முடி.
ஒரு கூட்டத்தில் அநாகரிகமாக அறுவறுக்கத்தக்க வகையில் குறிப்பாக கோடிக்கணக்கான மக்கள் அணுகுகின்ற மத சின்னங்களை எல்லாம் இழிவுபடுத்தி திருப்பி சொல்ல முடியாத அளவிற்கு மோசமான விஷயத்தை பேசி இருக்கிறார். சமூக நீதிப் பேசும் கட்சி, சமூக நீதி ஆட்சி நடத்துகிறோம் என கூறும் அரசாங்கம், மூத்த அமைச்சர் கட்சியின் சாதாரண பொறுப்பில் இருக்கும் நபர் அல்ல பொன்முடி அவர் ஒரு முக்கிய அமைச்சர் எந்த அளவிற்கு அநாகரிகமாக பேசுகிறார் என்றால் அவரின் கட்சி பொறுப்பை மட்டும் பறித்து திமுக ஏதோ நடவடிக்கை எடுத்தது போல் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.
பாஜகவை பொறுத்தவரை அந்த அமைச்சரை அமைச்சரவையில் இருந்து மாநிலத்தின் முதலமைச்சர் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். திமுக பேச்சாளர்கள் தலைவர்கள் அனைவரும் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததை பெருமையாக பேசுகிறீர்கள். யாகாவராயினும் நாகாக்க என்பதை மறந்துவிட்டு பேசுகிறீர்கள் 2026 தேர்தல் உங்களுக்கு பாடம் சொல்லும் தேர்தல் ஆக இருக்கும் என்பதை பாஜக சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளாா்.
பொன்முடி பதவி பறிப்பு! துரைமுருகன் மன்னிப்பு கடிதம்! என்ன நடக்கிறது திமுக-வில்!