வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க சென்று கைக்குழந்தையுடன் வீட்டை இழந்த பெண்ணுக்கு கண்களை துடைத்து அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறியவும், நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் சி.வெ. கணேசன் சென்ற பொழுது முள்ளிகிராம்பட்டு பகுதியில் பொதுமக்கள் சூழ்ந்து கால்வாய் அமைக்கவும், பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதனையடுத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது வெள்ளத்தால் இடிந்த வீட்டில் கைக்குழந்தையுடன் தவித்த பெண்ணுக்கு கண்களை துடைத்து ஆறுதல் கூறி உடனடியாக தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டா கேட்ட பொழுது தாசில்தார் அங்கு வராததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 5 நிமிடத்திற்குள் வரவேண்டும் என உத்தரவிட்டு 15 நாட்களுக்குள் பட்டா அளிக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.