spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது

-

- Advertisement -
kadalkanni

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான தரவரிசை இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இளநிலைப் படிப்புகளுக்கான (பி.வி.எஸ்.சி, ஏ.எச், பி.டெக்) மாணவா்
சோ்க்கை விண்ணப்பப் பதிவு, ஆன்லைன் வழியே கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவப் படிப்புக்கு 14,497 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 3,000 மாணவர்களும் என மொத்தம் 17,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் கடந்த ஜூன் 3 முதல் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. கோழி இன தொழில்நுட்பம், பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது. கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியலை http://tanuvas/adm.ac.in,, http://www.tanuvas.ac.in/ஆகிய இணையதள பக்கங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

MUST READ