Homeசெய்திகள்தமிழ்நாடுகபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

-

- Advertisement -

பஞ்சாபில் கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

"இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்ய வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ