- Advertisement -
வேகத்தடையில் மோதி நிலைதடுமாறி கவிழ்ந்த வேன்
கோவில்பட்டியில் வேகத்தடையில் மோதி நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே துரைசாமிபுரம் கிராமத்தில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றுள்ளனர். வேன் தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது வேகத் தடையில் மோதியது. அப்போது வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் இடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பஞ்சவர்ணம் (55) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 5-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.