Homeசெய்திகள்தமிழ்நாடுவழிகாட்டும் மைல் கல்லை கடவுளாக்கிய கிராம மக்கள்.. ஆயுத பூஜை ஸ்பெஷல்…!

வழிகாட்டும் மைல் கல்லை கடவுளாக்கிய கிராம மக்கள்.. ஆயுத பூஜை ஸ்பெஷல்…!

-

வழிகாட்டும் மைல் கல்லை கடவுளாக்கிய கிராம மக்கள்.. ஆயுத பூஜை ஸ்பெஷல்…!கோவை அருகே வழிகாட்டும் மைல் கல்லிற்க்கு அப்பகுதி மக்கள் ஆயுதபூஜை நடத்தியிருக்கின்றனர். கோவையில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழில் நிறுவனங்கள், பஸ், லாரி, கார் உட்பட வாகனங்ளை வைத்திருப்பவர்களும் அவற்றை  சுத்தம் செய்து பூஜை செய்து வழிபட்டு கொண்டாடினர்.

இந்த நிலையிலே, தடாகம் ரோடு கணுவாய் அடுத்துள்ள சோமையனூர், காளையனூர் பகுதியை சேர்ந்த மக்கள் சாலை ஓரங்களில் ஊர் பெயருடன் வாகனங்கள் போகவேண்டிய தொலைவை (கி.மீ) குறிக்கும் மைல்கல்லிற்க்கு ஆயுதபூஜை நடத்தி வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றனர்.

வழிகாட்டும் மைல் கல்லை கடவுளாக்கிய கிராம மக்கள்.. ஆயுத பூஜை  ஸ்பெஷல்…! கல்லை சுத்தம் செய்து இரண்டு புறமும் வாழை கன்றுகள் கட்டி பூமாலை போட்டு பூஜை செய்தனர். அந்த பகுதியில் சென்றவர்களுக்கு பொரிகடலை, சுண்டல் கொடுத்துள்ளனர்.

வருடம் முழுவதும்  வழிகாட்டியாக இருக்கும் மைல் கல்விற்க்கு ஆயுதபூஜை அன்று வழிபாடு நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

MUST READ