இளைஞர் ஒருவர் ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு பழுதடைந்த செல்போன் மற்றும் பேட்டரிகள் வந்ததால் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த நிறுவனமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்து குமார். இவர் பிரபல வணிக ஷாப்பிங் வலைதளத்தில் செல்போன் ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு பழுதடைந்து போன செல்போன் மற்றும் பேட்டரி கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார், தான் பெற்ற பொருளை அன்பாக்ஸ் செய்ததை வீடியோவாக எடுத்ததன் பேரில் அதனை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டார். ஆனால் அவரின் புகாருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நாங்கள் சரியான பொருட்களை தான் கொடுத்தோம் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் எனக்கான பணத்தையும் அல்ல எனக்கான பொருளையும் கொடுக்காவிட்டால் கன்ஸ்யூமர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.