மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காகத் தீவுத்திடலுக்கு மாற்றப்பட உள்ளதாக தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
ரீல் மட்டுமல்ல ரியல் வாழ்விலும் விஜயகாந்த் ஹீரோ – சிம்பு உருக்கம்
இது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று (டிச.28) காலை 06.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தே.மு.தி.க.விற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். கேப்டன் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை (டிச.29) வெள்ளிக்கிழமை காலை 06.00 மணியிலிருந்து மதியம் 01.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.
ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்தவர்…. விஜயகாந்த் மறைவிற்கு சூர்யா இரங்கல்!
கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 01.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 04.45 மணியளவில் தே.மு.தி.க. தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.