Homeசெய்திகள்தமிழ்நாடுதீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

-

 

தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்தை பார்க்க கண்கலங்கி ஓடி வந்த விஜய்!

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். வி.ஐ.பி.கள், திரை பிரபலங்கள் வருவதற்கு தனிப்பாதையும், தொண்டர்கள், ரசிகர்கள் வருவதற்கு தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது.

அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர்…. விஜயகாந்த் குறித்து ரஜினி!

தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் மதியம் 01.00 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட உள்ளது. தீவுத்திடலில் இருந்து மதியம் 01.00 மணிக்கு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும். கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலக வளாகத்தில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கு மாலை 04.45 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ