Homeசெய்திகள்தமிழ்நாடுதீவுத்திடலில் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதி!

தீவுத்திடலில் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதி!

-

 

தீவுத்திடலில் மாநகராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதி!

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர்…. விஜயகாந்த் குறித்து ரஜினி!

தீவுத்திடல் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவறை, குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோருக்காக குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தீவுத்திடலில் கட்சியினர், பொதுமக்கள் அமரக்கூடிய வகையில் 2,000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

சென்னை தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை; காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, 100 அடி சாலையில் சரக்கு வாகனங்களுக்கு அனுமதியில்லை. சரக்கு வாகனங்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

விஜயகாந்தை பார்க்க கண்கலங்கி ஓடி வந்த விஜய்!

வெளியூரில் இருந்து வருவோரின் வாகனங்களை மெரினா கடற்கரை, பல்லவன் சாலையில் நிறுத்திக் கொள்ளலாம். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வரவுள்ளதால் தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

MUST READ