5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேரூந்துகளில் கட்டணம் கிடையாது
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் பத்தாயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த பேரூந்துகளில் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். இதை தற்போது ஐந்து வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பேரூந்துகளில் ஐந்து வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.
மாவட்ட விரைவு பேரூந்துகளில் மூன்று வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது ஐந்து வயது முதல் பன்னிரெண்டு வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.