ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த கட்டுப்பாடு இல்லை
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ம் தேதி தொடங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போர் தங்களது சேமிப்புக் கணக்கு மட்டுமின்றி வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொளலாம். ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ம் தெதி தொடங்குகிறது. அதிகபட்சமாக ஒருநேரத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புக்கு மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ளலாம். வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்கவே ஒருவர் ரூ.2,000 மதிப்பிலான 10 தாள்களை மட்டுமே மாற்ற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.