Homeசெய்திகள்தமிழ்நாடுமூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

-

 

மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக்கோரி ஆசிரியைகள் இருவர் தாக்கல் செய்ய மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மூன்றாவது பிரசவத்திற்காக பேறுகால விடுமுறை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், இரண்டு குழந்தைகள் பிரசவத்திற்கு மட்டும் அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படும் எனக் கூறியும், மூன்றாவது பிரசவத்திற்கு வழங்கப்படாது எனக் கூறியும் உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து ஆசிரியைத் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சதீஸ்குமார் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஸ்குமார், இரு குழந்தைகள் பிரசவத்திற்கு மட்டுமே பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்ற அரசின் கொள்கை முடிவை மீறி, மூன்றாவது பிரசவத்திற்கு விடுப்புக் கோர முடியாது என்றும் மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர் உத்தரவு!

இதேபோல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியையும் மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கோரிய வழக்கையும் நீதிபதி சதீஸ்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

MUST READ