திருவள்ளூரில் திருக்குறளை ஒப்புவித்தால் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
திருவள்ளூர் எல்.ஐ.சி. சிக்னல் பகுதியில் பிரபல பிரியாணி கடை ஒன்றின் சார்பாக, ஒரு பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. அதில், பிரியாணி கடையில் இரண்டாம் ஆண்டாக திருக்குறள் போட்டி நடக்கவிருப்பதாகவும், இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் திருக்குறளை ஒப்புவித்தால் இலவசமாகப் பிரியாணி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்டவர்கள் 10 திருக்குறளையும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 திருக்குறள்களையும் ஒப்புவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய இரு நாட்களும் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என பிரியாணி உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர் சரிவில் தங்கம் விலை – இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
பொதுமக்கள் மத்தியில் திருக்குறளைக் கொண்டுச் செல்லும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி, அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல், மற்ற வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.