திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22).சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார்.அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த வெங்கட் (எ) வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் ஆதிகேசவன் ஆகியோர் டியோ வாகனத்தில் வந்து நடந்து சென்று கொண்டிருந்த மணிகண்டனிடம் செல்போனை கேட்டு கத்தியால் வெட்டியுள்ளனர்.
தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…
இதில் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதன் பின்னர் மணிகண்டன் தனது நண்பர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். உடனடியாக 7 பேர் கொண்ட நண்பர்கள் குழு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று வெங்கட் (எ) வெங்கடேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மணிகண்டனை வெங்கடேசன் தரப்பினர் வெட்டி செல்போனை பறிக்க முயலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதற்கு பழி தீர்க்கும் விதமாக மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசனை சரமாரியாக வெட்டும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் வெங்கடேசனை துரத்தி செல்லும் அந்த கும்பல் துரத்தி சென்று ஒரு இடத்தில் சூழ்ந்து கொண்டு தலை,முதுகு, கழுத்து என ஆக்ரோஷமாக வெட்டு வெட்டு என கூறிக் கொண்டு கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…
குறிப்பாக திருமுல்லைவாயல் காவல் எல்லைக்கு உடப்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் வீடு புகுந்து மண்டப உரிமையாளர் கொலை, அவரது குடும்பத்தினர் 3 பேருக்கு அரிவாள் வெட்டு, திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த சாலை ஒப்பந்ததாரர் சாலை அமைக்கும் போது மாமூல் கேட்டு சரமாரியாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதி, சாலையில் சென்றவரிடம் கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு அதற்கு பழி தீர்க்கும் வகையில் பட்டப்பகலில் துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது என அடுத்தது நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
செல்போன் பறிப்பிற்கு பழிவாங்கும் விதமாக ஓட ஓட துரத்தி வெட்டப்பட்ட வெங்கடேசன் மீது கொலை வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது.