Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடியில் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

ஆவடியில் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

-

ஆவடியில் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்திருவள்ளூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி மாநகர் மாவட்ட தலைவர் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, திருவள்ளூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பாளர்கள் தங்கள் நிறை குறைகளை எடுத்துரைத்தனர்.

இதில் திருவள்ளூர், பொன்னேரி,ஆவடி,உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதியில் இருந்து சுமார் 1000-திற்கும் மேற்பட்ட கட்சி மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மேடையில் பேசிய செல்வப்பெருந்தகை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை பலப்படுத்துவதற்கு கட்சி நிர்வாகிகள் முதலில் கிராமப்புறங்களில் இருந்து பணிகளை துவங்கிட வேண்டும், மக்களை சந்தித்து மக்கள் குறைகளை கேட்டு மக்களுக்கு பணி செய்திட வேண்டும் அவ்வாறு செய்தால் காங்கிரஸ் பேரியக்கம் பெருமளவு பலப்படும் பாசிச ஆர் எஸ் எஸ் கும்பளையும் பாஜகவையும் காங்கிரஸ் இயக்கம் வெற்றி பெற்று, மக்கள் பாதுகாப்புடன் வாழவும் ராகுல் காந்தி தலைமையிலான பிரதமர் ஆட்சி அமைத்திடவும் இந்தியா கூட்டணி வெற்றி பெற பொறுப்பாளர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை கேட்டு கொண்டார்.

ஆவடியில் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

பின்பு செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை;

காங்கிரஸ் கூட்டணி ஓட்டுகளை தன்னுடைய ஓட்டுகளாக கூறிக் கொள்கிறது என்று அண்ணாமலை பேசியதற்கு பதில் அளித்தவர்,

அண்ணாமலை யார் யாருடன் கூட்டணி வைத்திருக்கிறாரோ அனைத்து ஓட்டுகளும் தன்னுடைய ஓட்டு என்றும் அதேபோல் பாமக ஓட்டு அனைத்தும் அவருடையதாகவும் முதலியார் கட்சி ஏ சி சண்முகம் அவர்களின் வாக்கும் தன்னுடைய வாக்கு என்றும் அதேபோல் பாரிவேந்தர் அவர்களுடைய கட்சி வாக்குகளும் தன்னுடைய வாக்கு என்றும் அதேபோல் ஓபிஎஸ் டிடிவி தினகரன் அவர்களுடைய வாக்குகளும் தன்னுடைய வாக்குகள் என்றும் அண்ணாமலை தெரிவிப்பதாக கூறினார்‌.

கட்சிக்கு நாங்கள் வருகிறோம் என்று இபிஎஸ்சிடம் கேட்கவில்லை, அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்கிறார் – ஓபிஎஸ்

காங்கிரஸ் பேரியிக்கத்திற்கு வாக்களிப்பவர்கள் தேசம் முழுவதும் இருப்பதாகவும் , ஏறக்குறைய 130 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த கட்சி காங்கிரஸ் பேரியக்கம் என்று பெருமிதம் கூறினார். மேலும் அண்ணாமலை சொல்வதற்கு ஒன்றுமே கிடையாது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றங்கள் எப்படி நடக்கிறது எதற்காக நடக்கிறது என்பதையும் நாங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் என முதல் வருடம் முதலே வலியுறுத்திவந்திருக்கிறோம். கடந்த பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சியில் எத்தனை கொலைகள் நடந்துள்ளது, இப்பொழுது எவ்வளவு நடக்கிறது என்பதை கவனித்தால் தற்பொழுது குறைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

MUST READ