Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை

திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை

-

திருவள்ளூர் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை

திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரகுபதி இவருக்கு லாவண்யா என்பவரிடம் திருமணம் நடந்து யூகேஷ் -17 என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் இருந்து வருகிறார். லாவண்யா ஏற்கனவே குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் ரகுபதி இரண்டாம் தரமாக பிரியா என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு  திருமணம் செய்து அவருக்கு சந்தோஷ் என்ற 13 வயது மகனும் இருந்து வருகின்றனர். யுகேஷ்-17 திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

ரகுபதி இரண்டாவது மனைவியான சித்தி முறையில் உள்ள பிரியா அடிக்கடி யுகேஷை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் மனம் உடைந்த பள்ளி மாணவன் யூகேஷ் கிராமப் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை உடலை மீட்ட கிராம மக்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டின் அருகே வைத்து இருந்த வந்த நிலையில் கடம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதால் பள்ளி மாணவன் உடலை மீட்டி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் திட்டியதால் பள்ளி மாணவன் மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – உதகை மண்டல போக்குவரத்து கழகம்

MUST READ