காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடிக்கும் மெகா 156 ….. டைட்டில் வெளியீடு!
திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்- ஆளுநர் ரவி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தனுஷின் 51வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
இந்த பதிவுடன் திருவள்ளுவர் காவி உடை அணிந்த புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருப்பது அரசியல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.