வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள அரசு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 19) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான ஆர்.என்.ரவி, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம், உயர்கல்வித்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மணிப்பூரில் நீடிக்கும் வன்முறையால் பதற்றமான சூழல்!
விழாவில், முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள் உட்பட 564 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் முனைவர் க.பொன்முடி, “மற்ற நாடுகளை விட சுய தொழில் தொடங்குவதில் நமது நாடு முதலிடத்தில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
“இளைஞர்களின் நம்பிக்கையை பா.ஜ.க. அரசு நசுக்கிவிட்டது”- ராகுல் காந்தி விமர்சனம்!
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது சர்ச்சையான நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.