Homeசெய்திகள்தமிழ்நாடுஇது அறிந்தே செய்யும் அநீதி - கவிஞர் வைரமுத்து

இது அறிந்தே செய்யும் அநீதி – கவிஞர் வைரமுத்து

-

இது அறிந்தே செய்யும் அநீதி - கவிஞர் வைரமுத்து

2024-2025 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எகஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது அறிந்தே செய்யும் அநீதி - கவிஞர் வைரமுத்து

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில்
உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டுள்ளது

இது
அறிந்தே செய்யும் அநீதி

தனக்கு எதிராக
குடைப்பிடித்தவனுகும்
சேர்ந்தே பொழிவது தான்
மழையின் மாண்பு

மழை மாண்பு தவறிவிட்டது

நிதிநிலை அறிக்கையில்
குறல் ஒன்று கூறுவது
எழுதாத மரபு
இவ்வாண்டு விடுபட்டுள்ளது

எழுத வேண்டிய குறல் என்ன தெரியுமா?

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

MUST READ